×

சித்தூர் அருகே பரபரப்பு மாந்தோப்பில் அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை

யார் அவர்? போலீசார் விசாரணை

சித்தூர் : சித்தூர் மாவட்டம் கங்காதர நல்லூர் மண்டலம் பெத்த கால்வா பஞ்சாயத்து செர்லோ பள்ளி கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் கங்காதர நெல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 30 முதல் 35 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் சடலத்தை சோதனை செய்ததில் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை.

மேலும் பலத்த காயங்களுடன் சடலம் இருப்பதை கண்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடித்துகொலை செய்யப்பட்ட நபர் சிமென்ட் கலர் பேன்ட் ரஜினிகாந்த் உருவம் கொண்ட வெள்ளை டீ-சர்ட் அணிந்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் எந்த ஊர், எந்த பகுதியை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காணவில்லை என புகார்கள் ஏதாவது வந்துள்ளதா? இல்லையா என அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது கற்களால் தாக்கிய பலத்த காயங்கள் இருப்பதால் இவரை யாராவது கடத்தி வந்து கற்களால் தாக்கி கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த நபர் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக சித்தூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post சித்தூர் அருகே பரபரப்பு மாந்தோப்பில் அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Mantop ,Cherlo School Village ,Petha Kalva Panchayat, Chittoor District ,Gangadhara Nallur Mandal ,Dinakaran ,
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து