×

துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் பயங்கர காட்டுத்தீ

துவரங்குறிச்சி, பிப்.28: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செவல்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லிங்கம்பட்டி அருகே உள்ள கிளாமரத்து குட்டு பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தீ பற்றி எரிந்தது. மலையில் காய்ந்த சருகுகள் மற்றும் லெமன் வகையிலான புற்செடிகள் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. வெயில் காலங்களில் இதுபோன்று அடிக்கடி மலை பகுதியில் தீப்பற்றி எரிவதால் உயிரினங்கள் தீக்கு இரையாக நேரிடுகிறது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் வாகனம் செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மலைக்கு நடந்தே சென்று தீயை அணைக்க போராடினர். ஆனால் அப்பகுதியில் காற்று அதிகம் வீசுவதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்களும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து அங்கு உள்ள செடி கொடிகள் உள்ளிட்டவைகளை கொண்டு தீயை அணை த்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் பயங்கர காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Turangurichi ,Thuarangurichi ,Klamarat Kutu ,Lingambatti ,Sewalpatti Panchayat ,Thurangurichi district ,Turankurichi ,Dinakaran ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு