×

புதுமாப்பிள்ளை உடலில் 53 இடங்களில் வெட்டு

சேலம், பிப்.28: சேலத்தில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் பட்டதாரி உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி புதுகிளை ரோடு லைன்மேட்டை சேர்ந்தவர் முபாரக்(21). கூலித்தொழிலாளியான இவருக்கும், டவுன் பகுதியை சேர்ந்த ஷாசினி (21) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 24ம்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் முபாரக் மனைவியை ₹2 லட்சம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இவரது கொடுமை தாங்க முடியாத காரணத்தினால் ஷாசினி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தெரிந்து கொண்ட ஷாசினியின் சித்தப்பா சையத் பயாஸ், நண்பர்களுடன் சேர்ந்து முபாரக்கை சூரமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள்மலை பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், சையத் பயாஸ்(39) பைரோஸ்( 27) பழனிபாரதி(21) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிவிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் 6 பேர் டூவீலரில் சென்றது பதிவாகியிருந்தது. அப்படியானால் இன்னும் 2 பேர் யார் என்ற விசாரணையில், கந்தம்பட்டி காலனியைசேர்ந்த ரவுடி பிரவீன்(27) பிஇ பட்டதாரியான எம்ஜிஆர் நகரை சேர்ந்த அன்பரசன்(37) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் தான் கொலை நடந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்கிடையில கொலையான முபாரக் பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துவமனையில் நடந்தது. இதில் அவரது உடலில் 53 இடங்களில் வெட்டு விழுந்திருந்தது தெரியவந்தது. மதுபோதையில் அவர்கள் கொடூரமாக கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுமாப்பிள்ளை உடலில் 53 இடங்களில் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mubarak ,Salem Annadhanapatti ,Puduklai Road ,Shashini ,
× RELATED பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த...