×

ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது அரியலூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்

அரியலூர், பிப். 28:அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறறக்கப் பாதுகாப்பு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியரகம் மற்றும் செந்துறை, ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 3 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.முன்னதாக, அவர்கள் மேற்கண்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

The post ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது அரியலூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Revenue ,Ariyalur ,Tamil Nadu Revenue Department ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...