×

நாகை அருகே நடுக்கடலில் படகை கவிழ்த்து 2 பேரை கொன்ற வழக்கில் 7 மீனவர்கள் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அந்த பகுதியை சேர்ந்த ஆத்மநாதன்(33), இவரது சகோதரர்கள் சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன்(22) ஆகியோர் கடந்த 25ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கிழக்கே 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடலில் விரித்து வைத்திருந்த பைபர் படகின் வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் நடுக்கடலில் பைபர் படகை கவிழ்த்து விசைப்படகு மீனவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோர் நாகப்பட்டினம் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டனர். சிவநேசசெல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயத்துடன் நடுக்கடலில் மாயமான காலாத்திநாதன் உடல் நேற்று கல்லார் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கீச்சாங்குப்பம் மீனவர்கள் காளியப்பன்(30), மாரியப்பன்(26), வேலாயுதம்(66), ஸ்ரீதர்(52), கண்ணன்(எ) கண்ணதாசன்(40), தண்டபாணி(45), பாலகிருஷ்ணன்(61) ஆகிய 7 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நாகை அருகே நடுக்கடலில் படகை கவிழ்த்து 2 பேரை கொன்ற வழக்கில் 7 மீனவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Atmanathan ,Sivanesaselvam ,Kalathinathan ,Santhosh ,Akkaripettai ,Dinakaran ,
× RELATED நாகை அருகே வெடிவைத்து குடிசை வீடுகள்...