×

வெள்ளியாவிளை புனித அலோசியஸ் பள்ளி 6 வது ஆண்டு விழா

கருங்கல், பிப்.28: கருங்கல் அருகே வெள்ளியாவிளை புனித அலோசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6ம் ஆண்டு விழா நடைபெற்றது. ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட கல்வி அலுவலர் முருகன் (மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள்), மாத்திரவிளை வட்டார முதல்வர் அருட்பணி மரிய வின்சென்ட் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ஆரோக்கிய விமலா வரவேற்றார். பரதநாட்டியம், கிராமிய கலைகள், மேற்கத்திய நடனம், கணினி, ஓவியம், இசை,யோகா, தற்காப்பு கலைகள்,கைவினை பொருட்கள் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சியிலும் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள், பதக்கங்களை, சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி பாராட்டினர்.

The post வெள்ளியாவிளை புனித அலோசியஸ் பள்ளி 6 வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Velliavilai St. Aloysius School ,6th Anniversary ,Karungal ,St. Aloysius Matriculation School ,Velliyavilai ,Assembly Congress ,President ,Rajeshkumar ,MLA ,Velliyavilai St. Aloysius School ,Anniversary ,Dinakaran ,
× RELATED 2 அடி நீளத்தில் காய்த்த பயறு