×

கத்தி முனையில் மிரட்டி வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன், ரூ.15 ஆயிரம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பெரம்பூர்: வடமாநில தொழிலாளர்களை கத்திமுனையில் மிரட்டி, ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடி ஜீவா ரயில்வே சுரங்கப்பாதை அருகே, தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு, வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள், பணியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரடடி ரூ.15 ஆயிரம், 2 செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்த மேம்பால பணி மேலாளர் சதீஷ் (28), ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கத்தி முனையில் மிரட்டி வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன், ரூ.15 ஆயிரம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : North State ,Perambur ,North ,State ,Kathimuna ,Vyasarpadi Jeeva Railway Tunnel ,Dinakaran ,
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...