×

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

திருப்போரூர்: திருப்போரூர் அரசு பள்ளியில், நோய் வராமல் தடுக்கும் வகையில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சிறுங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில், திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தேவி வரவேற்றார். அரசு சித்த மருத்துவர் வானதி நாச்சியார் நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் குறித்தும், அதை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கினார். இதில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டு, 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.

The post அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Tiruporur government ,Nilvavembu ,Sirungunram Government Primary Health Center Siddha Medical Department ,Nilavembu ,Tiruporur Government Women's High School ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ