×

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான 88 மரங்கள் ஏலம்

திருவள்ளூர்: நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான 88 மரங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி பகுதியில் நெடுஞ்சாலையில் உயிரோடு இருக்கும் மரங்களை அகற்றுவதற்காக திருத்தணியில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பொது ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவிப் பொறியாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் மாவட்ட பசுமைக்குழு ஒப்புதல் பெறப்பட்டு மாவட்ட வன அலுவலரால் 88 மரங்கள் ரூ.4 லட்சத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டன. இந்நிலையில் ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள் அகற்றப்பட உள்ள 88 மரங்களையும் ரூ.4.05 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான 88 மரங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Arakkonam, Thiruthani ,Thiruthani ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...