×

முளைக்கட்டிய கொள்ளு குழம்பு

தேவையான பொருட்கள் :

முளைக்கட்டிய கொள்ளு – 200 கிராம்
கத்தரிக்காய் – 5
சின்ன வெங்காயம் – 2
தக்காளி – 3
வரமிளகாய் – 5
கொத்தமல்லி – 25 கிராமம்
சீரகம் – சிறிதளவு
பட்டை – ஒரு துண்டு
தேங்காய் துருவல் – சிறிதளவு

செய்முறை :

முளைக்கட்டிய கொள்ளு குழம்பு வைப்பதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, வர மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவை வதங்கிய பின்பு ஒரு கண்டு பட்டை மற்றும் சீரகத்தையும் போட்டு நன்கு வதக்கவும் பின் இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளினை மூளை கட்டுவதற்காக ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் வெள்ளைத் துணியில் அதை நன்கு கட்டி ஒரு பாத்திரத்தை அதன் மேல் கவித்தி மூடி வைத்துவிடவேண்டும். ஓரிரு நாளில் முளை நன்கு வரும். இந்த முளைக்கட்டிய கொள்ளினை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு கத்திரிக்காயை நறுக்கி போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.கத்திரிக்காய் முக்கால் பாகம் வெந்த உடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை அதில் ஊற்றி வேக விட்டு சிறிதளவு தண்ணீரையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் சிறிது மஞ்ச பொடி தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.இந்த கலவை நன்கு கொதித்தவுடன் இறக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.எளிய முறையில் உடல் எடையை குறைக்க கூடிய முளைகட்டிய கொள்ளு குழம்பு தயார். இதனை சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

The post முளைக்கட்டிய கொள்ளு குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிஸ்கட் ஹல்வா