×

திருநீற்றுப் பச்சிலையில் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவ குணம் மிக்க திருநீற்றுப் பச்சிலை மணம் வீசும் சிறப்பு பெற்றது. மலைப்பகுதிகளிலும், கோயில்களிலும் அதிகம் காணப்படுகிறது.இதன் விதைகள் இனிப்பு சுவையுடையது. இதுவே சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.இதன் விதைகளை சிறிது எடுத்து கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும்.வயிற்றுவலி, கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், அடைப்பு போன்ற உபாதைகளுக்கு சப்ஜா விதைகளை இரண்டு மணிநேரம் ஊறவைத்து வெது வெதுப்பான நீர் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

குளிக்கும் நீரில் அரைமணி நேரம் பச்சிலைகளை ஊறவைத்து குளித்து வந்தால் உடலில் உள்ள வியர்வை, நாற்றம் நீங்கும்.திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பற்றுப் போட்டாலும், உள்ளங்கையில் நன்றாக கசக்கி லேசாக முகர்ந்து பார்த்தால், தலைவலி, தூக்கமின்மை பிரச்னை குணமாகும்.கப வாந்திக்கு திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சாறு எடுத்து வெந்நீர்க் கலந்து சிறிது நாட்டுச் சர்க்கரை தேன் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.இந்த இலையை அரைத்து கண் கட்டி மீது பற்று போட்டு உலர்ந்ததும் கழுவி மீண்டும் போட கட்டி கரையும்.
முகப்பருவை விரட்ட திருநீற்றுப் பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.10 மிலி திருநீற்றுப் பச்சிலை சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மேல் சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும். குடலுக்கு பலத்தை கொடுக்கும்.இலையை மெல்லுவதால் வாய்ப்புண் குணமாகும். இலையை இதமாக நெருப்பில் வாட்டி பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளி காதில் விட காது மந்தம் தீரும்.திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள்.

இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளைப்படுதல் சரியாகும். 5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.திருநீற்றுப் பச்சிலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து

The post திருநீற்றுப் பச்சிலையில் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Thiruneiru Pachilai ,Dr. ,Kungumum ,
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!