×

தமிழ்நாட்டில் இந்தியாலேண்ட் ரூ.400 கோடி முதலீடு

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனமான இந்தியாலேண்ட், தமிழ்நாட்டில் மேலும் ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளது என சி.இ.ஓ. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாலேண்ட் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளது. கோவையில் உள்ள 8 லட்சம் சதுரஅடி அலுவலக இடத்தை மேம்படுத்த ரூ.300 கோடி முதலீடு செய்யப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரகடத்தில் உள்ள 6.5 லட்சம் சதுரஅடி தொழிற்பூங்காவை மேம்படுத்த ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இந்தியாலேண்ட் ரூ.400 கோடி முதலீடு appeared first on Dinakaran.

Tags : Indialand ,Tamil Nadu ,CHENNAI ,CEO ,Coimbatore ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...