×

திருச்சி விமான நிலையத்தில் ₹4.42 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, பிப்.27: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு டத்தி வரப்பட்ட ₹. 4.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இலங்கை வழியாக ஏர்லங்கா விமானம் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆண் பயணி ஒருவர் தனது ஆடையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக அறையில், 70 கிராம் பசைவடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ₹. 4.42 லட்சமாகும்.

The post திருச்சி விமான நிலையத்தில் ₹4.42 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Trichy ,Malaysia ,Airlanka ,Kuala Lumpur ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் வீட்டில் 17 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள் திருட்டு