×

புதுக்கோட்டை அருகே வேன் மோதியதில் ஒருவர் பலி: 4 பேர் காயம்

புதுக்கோட்டை,பிப்.27: புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்தவர் அழகப்பன்(58). இவரது மனைவி அனுசியா(53) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் மனைவி மனிஷா பேகம்(39). இவர்கள் 3 பேரும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று காரில் வந்து கொண்டிந்தனர். காரை, அழகப்பன் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நாராத்தாமலை அருகே பொம்மாடிமலை பகுதியில் வந்துகொண்டு இருந்தபோது எதிரே திருச்சி நோக்கி சென்ற பிக்கப் வண்டியும் மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த அழகப்பன் உயிரிழந்தார். காயம் அடைந்த அனுசியா, மனிஷா பேகம் மற்றும் பிக்கப் ஓட்டுநர் புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் மணிகண்ட பிரபு(33), அதில் பயணம் செய்த வெள்ளனூர் அருகே கிளியூரைச் சேர்ந்த நல்லசாமி மகன் கருப்பையா(36) ஆகிய 4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே வேன் மோதியதில் ஒருவர் பலி: 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Alagappan ,Pudukottai, Tiruvapur ,Anusia ,Abdul Rasheed ,Manisha Begum ,Trichy ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...