×

வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் ஜவுளித்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முழு ஆதரவு: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ‘வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் ஜவுளித்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும்’ என பாரத் டெக்ஸ் கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். டெல்லி பாரத் மண்டபத்தில் 4 நாள் பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற நாங்கள் தீர்மானித்துள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் நான்கு முக்கிய தூண்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள். இந்த 4 தூண்களுடனும் ஜவுளித்துறை இணைந்துள்ளது. எனவே, பாரத் டெக்ஸ் போன்ற கடந்த 2014ல் இந்திய ஜவுளித்துறையின் சந்தை மதிப்பீடு ₹7 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்தது. இது தற்போது ₹12 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஜவுளித் துறைக்கு பயனளித்துள்ளன. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. எனவே, வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் ஜவுளித்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான உங்களின் அனைத்து முயற்சிகளிலும் ஆதரவளிக்க அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பெரிய கனவுகளுக்காக அயராது உழைக்கிறோம்
நாடு முழுவதும் ₹41,000 கோடி மதிப்பில் 2,000 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒரே நேரத்தில் 2000 திட்டங்கள் தொடங்கப்படுவதன் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இந்தியா இப்போது எதை செய்தாலும் அதை முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் செய்கிறது. நாங்கள் பெரிய கனவுகளை காண்கிறோம். அதை நனவாக்க அயராது உழைக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பணிகளை மக்கள் கண்கூடாக பார்த்துள்ளனர்’’ என்றார்.

The post வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் ஜவுளித்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முழு ஆதரவு: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,PM ,Modi ,New Delhi ,Bharat Tex exhibition ,Bharat Tex textile exhibition ,Bharat Mandapam, Delhi ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!