×

இரவு பணியில் ஈடுபட்டபோது ரத்த வாந்தி எடுத்து எஸ்ஐ திடீர் மயக்கம்

தண்டையார்பேட்டை: எம்கேபி நகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (51), ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணேசன் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே ரோந்து பணியில் இருந்த போது, இவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக உதவி ஆய்வாளர் ராஜா, உடனடியாக கணேசனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு பணியின்போது உதவி ஆய்வாளர் ரத்த வாந்தி எடுத்து, மயங்கி விழுந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post இரவு பணியில் ஈடுபட்டபோது ரத்த வாந்தி எடுத்து எஸ்ஐ திடீர் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Dandiyarpettai ,Ganesan ,R. ,17th cross street ,MKB Nagar ,K. ,Nagar police station ,Dandaiyarpettai ,SI ,Dinakaran ,
× RELATED தோல் புற்றுநோய் தடுப்பது எப்படி?