×

பட்டப்பகலில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு

தண்டையார்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (23). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தாளுநர் வேலைக்கு சேர்ந்தார்.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் இவருடைய நண்பர்கள் ஆகாஷ், வசந்தகுமார், வேலன் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை 4வது தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்கள் வேலைக்கு சென்ற நிலையில், தினேஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அவர் கழிவறைக்கு சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில், வீடுபுகுந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பட்டப்பகலில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Dinesh Kumar ,Kilpennathur, Tiruvannamalai district ,Varadaraja Perumal Koil Street, ,Akash ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு