×

காந்திவலி அருகே மரம் முறிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி

காந்திவலி: காந்திவலியில் மரம் முறிந்து விழுந்து 79 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக பலியானார். காந்திவலி லோகன்ட்வாலா டவுன்சிப், விஸ்பரிங்க் பாம் ஹவுசிங்க் சொசைட்டியில் வசித்து வந்தவர் விஜயா விஜய் சோஜி(79). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் தோட்டத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தில் இருந்த தென்னைமரம் ஒன்று எதிர்பாராத விதமாக முறிந்து மூதாட்டி விஜயா மீது விழுந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த விஜயாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post காந்திவலி அருகே மரம் முறிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kandivali ,Vijaya Vijay Soji ,Whispering Palm Housing Society ,Kandivali Lokantwala Township ,
× RELATED மும்பையில் 8 மாடிகட்டடத்தில் பயங்கர தீ விபத்து; 2 பேர் பலி