×

இன்ஸ்டாகிராம் மோகம் சிற்றோடையில் குதித்த வாலிபர் சடலமாக மீட்பு

டோம்பிவலி: டோம்பிவலி காமத்கர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அசோக் மோர்யா(25). இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் எடுக்க தனது நண்பருடன் டோம்பிவலி மேற்கு மன்கோலி மேம்பாலத்திற்கு வந்திருந்தார். வீடியோ பதிவின் போது, மேம்பாலத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அசோக் சிற்றோடையில் குதித்தார்.

இதைப்பார்த்து அவரது நண்பர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மீட்பு குழுவினரின் உதவியுடன், வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதன்பேரில், 2 நாட்களுக்கு பிறகு அசோக் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் மோகம் சிற்றோடையில் குதித்த வாலிபர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dombivali ,Ashok Morya ,Dombivali Kamathgarh ,Dombivali West Mancoli ,Ashok ,Instagram ,
× RELATED நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை:...