×

டிராவல்ஸ் டிரைவர் அடித்துக் கொலை போலீசார் விசாரணை போளூர் அருகே பயங்கரம்

போளூர், பிப்.27: போளூர் அருகே குளக்கரையில் டிராவல்ஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் செல்வம்(38). இவருக்கு ஷீலா என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும், சுப என்கிற மகளும் உள்ளனர். இவர் போளூர் டிராவல்ஸ் வண்டியில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. தொடர்ந்து, நேற்று காலை முதல் மாலை வரை அவரது உறவினர்கள் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரெண்டேரிப்பட்டில் இருந்து பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள குளக்கரையில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக போளூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போளூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர் டிராவல்ஸ் டிரைவர் செல்வம் எனவும், அவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொலை செய்து சடலத்தை வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டிராவல்ஸ் டிரைவர் அடித்துக் கொலை போலீசார் விசாரணை போளூர் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Pangaram ,Polur ,Shanmugam Makan Selvam ,Periyakaram South Street ,Polur, Tiruvannamalai District ,Sheela ,Bolur ,
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...