×

கோலாட்டம் ஆடியபடி ஆந்திர மாநில பெண் பக்தர்கள் கிரிவலம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப்.27: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 111 பெண் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 111 பெண்கள், பாரம்பரியமான முறையில் தெலுங்கு பக்தி பாடலுக்கு கோலாட்டம் ஆடிக்கொண்டு நேற்று இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே நேற்று இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடுடன் கிரிவலத்தை தொடங்கிய இக்குழுவினர், நள்ளிரவு வரை கிரிவலம் சென்றனர். கோலாட்ட பயிற்சியாளர் சாய் பரத் தலைமையில், கோலாட்டம் ஆடிக்கொண்டு கிரிவலம் சென்ற இக்குழுவினர், ஏற்கனவே தொடர் கோலாட்டம் நடத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்திப் பெருக்குடன் கோலாட்டம் ஆடியபடி ஆந்திர மாநில பெண் பக்தர்கள் கிரிவலம் சென்றது வியப்பை ஏற்படுத்தியது.

The post கோலாட்டம் ஆடியபடி ஆந்திர மாநில பெண் பக்தர்கள் கிரிவலம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : Andhra State ,Thiruvannamalai ,Krivalam ,Tiruvannamalai ,Kadapa district ,Andhra Pradesh ,Kolatam ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...