×

நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சந்தைப்பேட்டை காவிரி நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில், அமைந்துள்ள நீரூந்து நிலையத்தை, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி ரமேஷ், ரவிக்குமார், ரமேஷ், வார்டு செயலாளர் பிரவீண் ஆகியோர் உடனிருந்தனர். கோடை காலம் நெருங்கும் முன்பே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. போதிய குடிநீர் தர திருச்செங்கோடு நகராட்சி சார்பில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை வீணாக்க கூடாது எனவும், குடிநீர் குழாய்களில் கசிவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார்.

The post நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : City council ,Tiruchengode ,Tiruchengode market ,Cauvery ,president ,Nalini Sureshbabu ,Tiruchengode Municipal ,Municipal Engineer ,Saravanan ,Bhubaneswar ,Dinakaran ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்