×

கலைஞர் உரிமைத்தொகை பெற இன்று சிறப்பு முகாம்

 

அந்தியூர்,பிப்.27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது: இதில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை கலைஞர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்கள் பெற்றிட சிறப்பு கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் அரசு அறிவித்த தகுதி இருந்தும் கிடைக்க பெறாதவர்கள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களின் நகலை வழங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தேவைப்படும் ஆவணங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், மகளிர் உரிமைத்தொகை பதிவு சீட்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தற்போதைய முகவரி மற்றும் மொபைல் நம்பர் கொடுத்திடவும். இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர், அத்தாணி பேரூராட்சி அலுவலகம், பச்சம்பாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம், பிரம்மதேசம் சண்முக மஹால் திருமண மண்டபம், கீழ்வாணி, மூங்கில் பட்டி இந்திரா நகர் சமுதாயக்கூடம், மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், சின்னத்தம்பி பாளையம் பிரிவு வாரி மஹால்,

கூத்தம்பூண்டி, சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், எண்ணமங்கலம் ஆலயங்கரடு சமுதாயக்கூடம், வேம்பத்தி அம்மன் கோவில் தம்பிக்கலையன் இல்லம், குப்பாண்டம் பாளையம் மாரியம்மன் கோவில், நகலூர் குண்டுபுளியாமரம் நியாய விலை கடை, சவுண்டபூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், பொம்ம நாயக்கன்பாளையம், சந்திராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம், பொலவக் காளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில், கடுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், கூகலூர்,பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சிறப்பு முகாம் இன்று காலை ஒரு மணி முதல் ஒரு மணி வரை நடைபெற உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் உரிமைத்தொகை பெற இன்று சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Andyur ,Erode district ,MLA ,A.G. ,Venkatachalam ,Andhiyur ,assembly ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!