×

2 இடங்களில் சூதாட்டம்: 12 பேர் கைது

 

ஈரோடு, பிப். 27: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக சித்தோடு போலீசாருக்கு நேற்று முன் தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது ஒரு கும்பல் சூதாடிக் கொண்டிருந்தது. போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (42), தாமோதரன் (24), ராமச்சந்திரன் (32), கவுதம் (31), கவின்குமார் (33), பவானி, பழனிபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டுகள், பணம் ரூ. 5,360 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, பெருந்துறை, பணிக்கம்பாளையம், குப்பக்காடு முள்புதர் அருகில் சூதாடிய கும்பலை பெருந்துறை போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மேற்கு வந்த மாநிலம், பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த அலிமுதீன் மூலா (38), சலாலுதீர் சர்தார் (32), ரபிக் லஸ்கர் (28), ஜாகிர் உசேன் காஸி (22), அஜிஜுல் மிஸ்திரி (33), ராஜூ ஜெயின் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூ. 1,900 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

 

The post 2 இடங்களில் சூதாட்டம்: 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Chithod ,Kalingarayan Dam ,Bhawani, Erode District ,Dinakaran ,
× RELATED வெல்லம் மூட்டைக்கு ரூ.60 உயர்வு