×

காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு அறிவிப்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடிக்கு எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. நிதிப்பகிர்விலிருந்து பேரிடர் நிவாரணம் வரை துரோகத்தை மட்டுமே ஒன்றிய பாஜ அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு மோடி வருகிறார்?. அனைத்துத் தரப்பினரும் 10 ஆண்டு மோடி ஆட்சியில் சொல்லொணா துயரை அடைந்துள்ளனர். எனவே தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்க எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தப்படும்.

The post காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு அறிவிப்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடிக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,Chennai ,Tamil Nadu ,Congress SC ,ST wing ,president ,Ranjan Kumar ,Modi government ,Union BJP government ,ST ,
× RELATED ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு