×

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர மாநில அரசு, குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டுவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதுடன், வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, தடையாணை பெற்று பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Supreme Court ,Bala river ,VAICO ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Andhra State Government ,Reddikuppam ,Kuppam ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ‘வேறு நீதிமன்றங்களில் சரணடைவது...