×

மாமல்லபுரம் மாசி மக விழாவில் காணாமல் போன சிறுமி மீட்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாசிமக விழாவில் இருளர் குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. அக்குழந்தையை நேற்று போலீசார் கண்டுபிடித்து மீட்டு, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற இருளர் இன மக்களின் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, முதல் நாளிரவு கடற்கரையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் தற்காலிக குடில் அமைத்து தங்கியிருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக, மதுராந்தகம் அருகே மையூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு-சல்சா தம்பதி, தங்களின் 3 வயது பெண்குழந்தை செல்வியுடன் வந்து தங்கியுள்ளனர். இரவு சிறுமி செல்வி திடீரென காணாமல் போனாள். புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீசார், சிறுமியை தேடி வந்தனர். நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு சற்று தூரத்தில் சிறுமி வழி தெரியாமல் அழுது கொண்டிருப்பதை ரோந்து போலீசார் கண்டறிந்தனர். காவல் நிலையத்துக்கு மீட்டுக் கொண்டு வந்து உணவு, தண்ணீர் வழங்கினர். தகவலறிந்து வந்த பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

 

The post மாமல்லபுரம் மாசி மக விழாவில் காணாமல் போன சிறுமி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Masi Maha Ceremony ,Mamallapuram ,Mamallapuram Masi Maga Festival ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...