×

மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்..!!

டெல்லி: பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன். இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வணிகப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், நிதித் துறைத் தலைவராகவும் உள்ளார். இங்கு பணிபுரிவதற்கு முன்பு, டாக்டர். சீனிவாசன் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நிதி உதவி பேராசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யூடியூப் விடியோக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். இவர் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனந்த் சீனிவாசன் பங்கேற்று வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக கோப்பண்ணா இருந்து வந்த நிலையில் தற்போது ஆனந்த் சீனிவாசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புதுறை தலைவராக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நியமித்துள்ளார்.

The post மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Anand Srinivasan ,Tamil Nadu Congress Committee ,Delhi ,Congress ,Tamil Nadu ,National University of Singapore ,Dinakaran ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...