×

பெங்களூரு தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்காக இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியருக்கு அனுமதி மறுப்பு!!

பெங்களூரு : கர்நாடக அரசு அழைப்பின் பேரில் பெங்களூரு தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்காக இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கிலாந்து பேராசிரியர் நிடாஷா கவுல் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட நிடாஷா கவுல் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தியா வருவதற்கான அனைத்து ஆவணங்கள் தன்னிடம் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக பேராசிரியர் நிடாஷா கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.

The post பெங்களூரு தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்காக இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியருக்கு அனுமதி மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : UK ,Bangalore National Integrity Conference ,Bangalore ,Bangalore National Integrity Convention ,Karnataka government ,Nitasha Kaul ,Jammu and ,Kashmir ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...