×

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி சஸ்பெண்ட்

அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைக்க கூடாது என இந்துத்துவ அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்.12ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. 7 வயது உள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் எனவும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது.

இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சிங்கத்தின் பெயர் வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா விசாரித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிங்கங்களுக்கு எதற்காக கடவுள், சுதந்திர போராட்ட வீரர், மன்னர்கள் பெயரை சூட்டுகிறீர்கள்? சிங்கத்திற்கு சீதை மட்டுமல்ல அக்பர் என பெயரிட்டதையும் ஏற்க முடியாதது. எனவே பெயரை மாற்றி சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்’’ என கேட்டுக் கொண்டு, வழக்கை பொதுநல மனுவாக மாற்றி தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார். மேலும் சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுமாறு கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அக்பர்-சீதா என பெயர் சூட்டியதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

The post சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tripura ,officer ,Akbar-Sita ,Tripura BJP government ,State Chief Forest Officer ,Prabin Lal Agarwal ,Supreme Court ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை