×

ஆந்திராவில் மதனப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்து: 5பேர் உயிரிழப்பு!!

மதனப்பள்ளி: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே பாரளப்பள்ளியில் கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மதனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள பாரளப்பள்ளியில், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதனப்பள்ளி போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் மதனப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்து: 5பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,Madanapally ,Madanapalli ,Paralapalli ,Andhra Pradesh ,Madanapally Hospital ,Madanapalli, Andhra Pradesh, Annamiya district ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்