×

விக்கெட் வேட்டையில் கும்ப்ளேவை முந்தினார்!

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை ஆர்.அஷ்வின் வசமாகி உள்ளது. ராஞ்சி டெஸ்டில் நேற்று 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய அஷ்வின், இந்திய மண்ணில் மொத்தம் 354 விக்கெட் கைப்பற்றி அனில் கும்ப்ளேவின் சாதனையை (350 விக்கெட்) முறியடித்தார்.

அஷ்வின் 35வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் கைப்பற்றி கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்து இந்திய பவுலர்களில் முதலிடத்தையும், உலக அளவில் 4வது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். முரளிதரன் (67 முறை), ஷேன் வார்ன் (37), ரிச்சர்ட் ஹாட்லீ (36) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

முதல் ஓவரிலேயே சுழற்பந்துவீச்சுடன் தொடங்கிய இன்னிங்சில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றுவது இது 16வது முறையாகும்.

இந்திய மண்ணில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 91 விக்கெட் வீழ்த்தி முதலிடம் பிடித்திருக்கிறார். முன்னதாக, ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (14 டெஸ்ட்) 86 விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

The post விக்கெட் வேட்டையில் கும்ப்ளேவை முந்தினார்! appeared first on Dinakaran.

Tags : Kumble ,R. Ashwin ,India ,Ashwin ,Ranchi Test ,Indian ,Anil Kumble ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...