×

துபாய் டென்னிஸ் ஜாஸ்மின் சாம்பியன்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் (25 வயது, 40வது ரேங்க்) மோதிய ஜாஸ்மின் (28 வயது, 26வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்டிலும் கடுமையாகப் போராடிய அவர் 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 13 நிமிடத்துக்கு நீடித்தது. ஜாஸ்மின் வென்ற 2வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டம் இது. முன்னதாக, 2021 போர்டோரஸ் ஓபன் பைனலிலும் அவர் கலின்ஸ்கயாவை வீழ்த்தி தனது முதல் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். இந்த ஆண்டு ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜாஸ்மினுடன் மோதிய கலின்ஸ்கயா அதில் வென்று முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post துபாய் டென்னிஸ் ஜாஸ்மின் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Dubai Tennis ,Jasmine ,Dubai ,Dubai Duty Free Tennis Series ,United Arab Emirates ,Jasmine Paulini ,Russia ,Anna Kalinskaya ,Jasmine Champion ,Dinakaran ,
× RELATED தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை...