×

காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

பாஜகவில் இ்ணைந்ததை தொடர்ந்து விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்தார். இந்நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன். விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது.

 

The post காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Congress ,Chennai ,Visayatharan ,Visayatharani ,Wlavangodu Assembly ,Delhi ,Union ,Minister ,BJP ,Murugan ,Dad ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...