×

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு!

சென்னை: சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்து வருகிறார். இன்று (25.02.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட ரிவர் வியூ காலனியில் நீர்வளத்துறை மூலம் ரூ.24.08 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் தலைமைச் செயலர் ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., அவர்கள் இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Siv Das Meena ,Chennai Alandoor Zone ,Chennai ,Tamil Nadu ,Chennai Alandur Zone ,Chief Secretary of the ,Government of Tamil Nadu ,E. Yes. P. ,Alandur ,
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...