×

திருவெறும்பூர் அருகே மினிலாரி மோதி மீன் வியாபாரி பலி

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே மொபட்டில் சென்ற மீன் வியாபாரி மினி லாரி மோதி உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே நவல்பட்டு சிலோன் காலனி அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (55). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பூலாங்குடி சாலையில் மொபட்டில் மீன் விற்பனைக்காக கொண்டு சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மினிலாரி மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவல்பட்டு போலீசார் முனியசாமி உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post திருவெறும்பூர் அருகே மினிலாரி மோதி மீன் வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Minilari Mothi ,Thiruvarumpur ,Thiruverampur ,Muniyasami ,Anna, Navalpattu Ceylon Colony ,Novalpattu ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து...