×

தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை முதல் திண்ணை பிரசாரம்

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை நாளை முதல் தொடங்குவது என்று தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்றுமுன்தினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அவை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செந்தில், சபியுல்லா, லீலாவேலு, கிழக்கு தொகுதி பார்வையாளர் ஈரோடு பிரகாஷ், திருவெறும்பூர் தொகுதி பார்வையாளர் மறைமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை முதல் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : South district DMK ,Tiruchi ,South District ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Tiruchi South District DMK ,Stalin ,
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம்