×

திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபடுவோம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

வலங்கைமான்: எம்பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என்று வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ராஜ்முகமது தலைமையில் ஆவூரில் நடைபெற்றது. திமுக மாவட்ட பிரதிநிதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், வலங்கைமான் நகர செயலாளர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் பேசுகையில், திமுக தலைவர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பது என எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தனித்தமிழ்மாறன் வீரபாண்டி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பவானி மற்றும் கிளைச் செயலாளர்கள்இ பாக முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ராஜ் முஹம்மது நன்றி கூறினார்.

The post திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபடுவோம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Valangaiman West Union ,Valangaiman ,Tiruvarur District ,DMK ,Raj Mohammad ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு