×

வடமதுரை அருகே வீட்டு கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு

வடமதுரை, பிப். 25: வடமதுரை அருகே தபால் ஊழியரிடம் வங்கியில் வீட்டு கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள பாடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமாயி (34). இவர் செங்குறிச்சியில் உள்ள தபால் நிலையத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினரான சந்திரசேகர் (39) என்பவர் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ராமாயிடம் தனக்கு வங்கியில் உள்ள பெரிய அதிகாரிகளை தெரியும். உனக்கு ரூ.20 லட்சம் வீட்டு கடன் வாங்கி தருகிறேன் எனக்கூறி அவரிடம் பணம் கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ராமாயி, செங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் இ- சேவை மையத்திலிருந்து சந்திரசேகருக்கு சிறிது சிறிதாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வரை பணம் அனுப்பி வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்திரசேகர் தன்னை ஏமாற்றுவதை அறிந்த ராமாயி இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் சந்திரசேகரை அழைத்து விசாரித்தபோது, அவர் ராமாயிக்கு ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்ததும், மீதி பணத்தை தருவதாக கூறி நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமாயி வேடசந்தூர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேனி சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வடமதுரை அருகே வீட்டு கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,North Madurai ,Ramayi ,Badiyur ,Sengurichchi ,
× RELATED பெரியபாளையம் அருகே வடமதுரை...