×

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன

 

பவானி,பிப்.25: குடியிருப்பு பகுதியில் புகுந்த இரு பாம்புகளை பவானி தீயணைப்பு படையினர் நேற்று இரவு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பவானி பெரியபுலியூரை அடுத்த வளையக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (26). இவரது வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு பாம்பு இருப்பதை கண்டார். இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.

இதேபோன்று பவானி ஊராட்சிகோட்டை, ஒபுலி மில் பகுதியைச் சேர்ந்தவர் கனகமணி (47). இவரது வீட்டின் முன் பகுதியில் ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இரு பாம்புகளும் கொடிய விஷம் நிறைந்தவை. இவை இரண்டையும் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.நள்ளிரவு நேரத்திலும் பாம்பு பிடிக்க விரைந்து வந்த தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Bhavani fire brigade ,Prabhu ,Vrangakkaranpalayam ,Bhavani Periyapuliyur ,Dinakaran ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்