×

கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடி மக்களின் பண்பாட்டுத்திருவிழா

 

சத்தியமங்கலம்,பிப்.25: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடி மக்களின் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.விழாவிற்கு ரீடு இயக்குனர் கருப்புசாமி தலைமை தாங்கி பேசினார் . பழங்குடியினரின் பாரம்பரிய கலையான பீனாச்சி இசைக்குழுவினர் வாசித்தனர். ரீடு சேவை நிறுவன கடம்பூர், ஆசனூர் கிராம வள மைய குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

மேலும் விழாவிற்கு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன்‌,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தென்பாண்டியன்,தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சுப்பிரமணியம்,சமூக ஆர்வலர் சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு ஸ்ரீராம்,தமிழ்நாடு பழங்குடியினர் சங்கம் ராமசாமி, மாநில மலைவாழ்மக்கள் இயக்கம் சடையலிங்கம், ஈரோடு வெள்ளாளர் கல்லூரி சமூகத்துறை முதல்வர் டாக்டர் யாசர், சமூக ஆர்வலர் சினேகா, பழங்குடியினர் சங்கம் பாலன், முன்னாள் வனத்துறை அலுவலர் சுப்பிரமணியம், குணசேகரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் 160 பழங்குடியினர் குழந்தைகள் தொடர்கல்விக்கு உதவியாக கல்வி உதவித்தொகை மொத்தம் ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உட்பட 500 பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

The post கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடி மக்களின் பண்பாட்டுத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Cultural Festival of Tribal People ,Kadampur Hills ,Sathyamangalam ,Reed ,Kadampur ,Benachi ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...