×

குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி தந்தை மகள் பரிதாப சாவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (38). இவர் தனது மூத்த மகள் மித்ரா, இளைய மகள் தனன்யா (5), உறவினர் குழந்தைகளான ரோஹித் (5) மற்றும் அக்சனித்தா (12) ஆகியோருடன் டியூப்பில் காற்று அடித்து மறைமலைநகர் அருகே உள்ள பணங்கோட்டூர் ஏரியில் அடிக்கடி குளிப்பது வழக்கம். அதன்படி நேற்றும் இவர்கள் பனங்காட்டூர் ஏரியில் குளித்தனர். இதில் சிறுமி தனன்யா ஏரியின் ஆழமான பகுதியில் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். மகள் தனன்யாவை காப்பாற்றச் சென்ற தந்தை மதனும் நீரில் மூழ்கத் தொடங்கினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மறைமலைநகர் போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புதுறை வீரர்கள் ஏரியில் மூழ்கிய மதன் மற்றும் தனன்யா ஆகிய இருவரையும் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள பொத்தேரி தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுமுறை தினத்தில் ஏரியில் குளிக்கச் சென்றபோது தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி தந்தை மகள் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madan ,Peramanur ,Kiramalai Nagar ,Chengalpattu district ,Mitra ,Dhananya ,Rohit ,Aksanitha ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...