×

வாலாஜாபாத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

 

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம், பேரூர் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் மக்களுக்கான திட்டங்கள், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் அரசின் பணிகள் மற்றும் ஏழை எளியோருக்கான நல திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கி பேசினர்.

கூட்டத்தில், எம்பி செல்வம், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை செயலா ளர்கள் குப்புசாமி, விக்டர்செல்வகுமார், அமலிசுதாமுனுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பூங்கொடிபழனி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமார் உட்பட கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK govt ,Walajabad ,Walajahabad ,Kanchipuram South District ,Uttaramerur Assembly Constituency Walajahabad Union ,Perur ,DMK ,Chief Minister ,M.K.Stal ,Walajahabad Bus Station ,Barur ,DMK government ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...