×

பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

சென்னை: வடபழனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், பிரபல நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, தனது தங்கையுடன், வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர் கூச்சலிட்டதால், அந்த நபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், சம்பவம் தொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த வாலிபரின் இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

அதில், கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர், பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விக்னேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadapalani ,Dinakaran ,
× RELATED இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?