×

அழகா இருந்தா உடனே கிட்னாவா… டிவி தொகுப்பாளரை ஆள் வைத்து கடத்திய பெண் தொழிலதிபர்

ஐதராபாத்: ஐதராபாத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருபவர் திரிஷ்னா(31). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிமோனியல் தளத்தில் டிவி தொகுப்பாளர் பிரணவ் என்பவர் குறித்த தகவல்களை பார்த்திருக்கிறார். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்து அவருடன் சாட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த பழக்கத்தில் திரிஷ்னாவிடம் தொழில் நிமித்தமாக பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் பின்னர்தான் சைதன்ய ரெட்டி என்பவர்தான் டி.வி.தொகுப்பாளர் புகைப்படத்தை தனது மெட்ரிமோனியல் புரொபைல் புகைப்படமாக வைத்து தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிவி தொகுப்பாளர் பிரணவை திரிஷ்னா தேடி கண்டுபிடித்து திருமணம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியும் போனில் தொடர்பும் கொண்டும் இருந்தார். இதனால் திரிஷ்னாவின் நம்பரை டிவி தொகுப்பாளர் பிளாக் பண்ணிவிட்டார்.

உடனே கோபம் அடைந்த திரிஷ்னா தனது அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேரை வைத்து உண்மைான டிவி தொகுப்பாளரை கடத்தினர். அங்கு திரிஷ்னா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் டிவி தொகுப்பாளர் மறுத்ததால் அவரை அடித்து உதைத்தனர். அங்கிருந்து தப்பித்து வந்து டிவி தொகுப்பாளர் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திரிஷ்னா மற்றும் அவரது ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அழகா இருந்தா உடனே கிட்னாவா… டிவி தொகுப்பாளரை ஆள் வைத்து கடத்திய பெண் தொழிலதிபர் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Trishna ,Pranav ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.