×

யுடியூபில் தவறான தகவல் பரப்பும் பயில்வான் ரங்கநாதன் மீது கருணாஸ் புகார்

சென்னை: யுடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் கருணாஸ் நேற்று புகார் அளித்துள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், நிருபர்களிடம் அவர் பேசுகையில், கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்தனர். நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்தார் என கூறினார். இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.

இணையதளத்தில் பல யுடியூப் சேனல்கள் இதுகுறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன், தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி பல்வேறு பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். இவர்கள் மீதும் பல யுடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சமூக வளைத்தளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இவ்வழக்கு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post யுடியூபில் தவறான தகவல் பரப்பும் பயில்வான் ரங்கநாதன் மீது கருணாஸ் புகார் appeared first on Dinakaran.

Tags : Karunas ,Ranganathan ,YouTube ,Chennai ,Chennai Police ,Commissioner ,Bailwan Ranganathan ,Salem West Union ,AIADMK ,Dinakaran ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...