×

தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ₹30 லட்சம் வழங்கிய அமெரிக்க தம்பதி

தஞ்சை: அமெரிக்காவின் ரோடு ஐலண்டில் வசிப்பவர்கள் டாக்டர் திருஞானசம்பந்தம்-விஜயலட்சுமி தம்பதி, தமிழர்களான இவர்கள் விஜயலட்சுமி திருஞானசம்பந்தம் தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை நிறுவினர். உலகமெங்கும் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சமயநெறி தழைக்க தங்கள் குடும்ப வருவாயின் ஒரு பகுதியை வழங்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் தமிழகம் வந்த இந்த தம்பதி நேற்று, தஞ்சை “தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.30 லட்சம் காசோலை வழங்கினர். காசோலையை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார்.

The post தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ₹30 லட்சம் வழங்கிய அமெரிக்க தம்பதி appeared first on Dinakaran.

Tags : Tanjore Tamil University ,Thanjavur ,Dr. ,Tirunnasambandham-Vijayalakshmi ,Rhode Island, USA ,Vijayalakshmi Thirunnasambandam Tamil Foundation ,Dinakaran ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...