×

தெலுங்கு சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய இளம்பெண்: திருமணம் செய்ய வலியுறுத்தி தனி அறையில் அடைத்து கொடுமை

தெலுங்கானா: தெலுங்கானாவில் டீ.வி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்தி திருமணம் செய்ய வலியுறுத்தி தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பிரபல தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் பிரணவ் பாரத் மேட்ரிமோனியில் இவர் பெயரில் வரன் வேண்டி பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்த்து ஸ்டார் அஃப் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வரும் திரிஷா அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அனால் மேட்ரிமோனி தளத்தில் தான் பதிவு செய்யவில்லை என்றும் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வேறுயாரோ பதிவு செய்து வைத்திருப்பதாகவும் பிரணவ் மறுத்துள்ளார். ஆனால் மேவெண்டும் பிரணவ்விடம் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திரிஷா வற்புறுத்தியுள்ளார். திருமணத்துக்கு பிரணவ் மறுப்பு தெரிவிக்கவே திரிஷா அவரை கடத்தி தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.

அங்கிருந்து தப்பி வந்து போலீசில் பிரணவ் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் பணம் சம்பாதிக்க சில மோசடி பேர் வழிகள் பிரணவ் பெயரில் போலி ஐ.டி உருவாக்கி இருப்sபது தெரியவந்தது. ஆனால் திரிஷா அதை பிரணவ்வின் உண்மையான விவரங்கள் என்று நம்பி அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். இதை அடுத்து போலீசார் திரிஷாவை கைது செய்து கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தெலுங்கு சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய இளம்பெண்: திருமணம் செய்ய வலியுறுத்தி தனி அறையில் அடைத்து கொடுமை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Pranav Bharat ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...