×

டான்பெட் உரக்கிட்டங்கியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

 

சிவகங்கை, பிப். 24: சிவகங்கையில் செயல்படும் டான்பெட் உரக்கிட்டங்கியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.  சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் தடையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பருவ காலங்களில் அவசர தேவைகள் ஏற்படும் போது 1000 மெ.டன் அளவிற்கு உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்திட டான்பெட் உரக்கிட்டங்கி உள்ளது.

இக்கிடங்கில் உள்ள உரங்கள் இருப்பு மற்றும் விநியோக விவரங்களை சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.  இதில் இந்த ஆண்டு டான்பெட் மூலம் யூரியா 4003 மெ.டன்கள் டிஏபி 1552 மெ.டன்கள் பொட்டாஷ் 770 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் 1551 மெ.டன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் 657 மெ.டன்கள் இருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் மானிய தொகை தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

மேலும், உரங்களை முறையாக பராமரித்து தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது திட்ட அலுவலர் சிவராமன், வேளாண்மை இணை இயக்குநர், தனபாலன், டான்பெட், மண்டல மேலாளர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன் மற்றும் டான்பெட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post டான்பெட் உரக்கிட்டங்கியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Danbed Urakkittanki ,Sivagangai ,District Monitoring Officer ,Lalvena ,Danbed Urakitangi ,Sivaganga district ,Primary Agricultural Co-operative Societies ,Danbed Urakittangi ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...