×

நாளை கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

 

திண்டுக்கல் பிப்.24: திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை பகல் 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கழக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சிறப்புரையாற்றுகிறார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழநி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனவே திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : East ,and West ,district DMK ,Dindigul ,and West District ,DMK ,Working Committee ,Dindigul District DMK ,Kalainar Maligai ,general secretary ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...